Monthly:October 2019
மாறுபட்ட exposure யில் எடுத்த RAW போட்டோக்களை கொண்டு எளிமையாக டtime lapse வீடியோக்களை உருவாக்குவது எப்படி என தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்
ஷட்டர் ஸ்பீடு ( shutter speed ) என்றால் என்ன? நாம் இதுவரை காமெராவின் பாகங்கள் செயல்பாடுகள் லென்ஸின் பாகங்கள் லென்ஸின் வகைகள் போன்ற அடிப்படை விஷயங்களை பார்த்தோம். இனி அடுத்த பகுதிக்கு செல்வோம். சிலர் விலை உயர்ந்த கேமராவை வாங்கி அதனை முறையாக கையாலும் விதத்தை அறியாமல் ஆர்வம் குறைந்து கேமராவை ஒரு மூலையில் வைத்து விடுவர். எனவே உங்கள் சப்ஜெக்டை வைத்து எந்த அளவு உங்கள் கிரியேட்டிவிட்டீயை வெளிப்படுத்த முடியும் என்பதை உங்கள் கேமரா கண்ட்ரோல் பற்றிய அறிவே தீர்மானிக்கிறது. அதில் முக்கியமான இரண்டு கண்ட்ரோல்கள் அவை அப்பெச்சர் மற்றும் ஷட்டர் ஸ்பீட். இவற்றை பற்றி ஏற்கனவே சுருக்கமாக பார்த்தோம். அப்பச்சர் மற்றும் ஷட்டர் ஸ்பீட் இரண்டும் எக்ஸ்போஷர் உருவாக்க […]
லென்ஸின் வகைகள் ஸ்டாண்டர்ட் லென்ஸ் ( Standard Lens): பொதுவாக இந்த வகை லென்ஸ்கள் ஏறக்குறைய மனிதனின் பார்வை கோணத்தை அதாவது 50mm லென்ஸ் போல ஒத்திருக்கும். இந்த வகை லென்ஸ்களின் போக்கால் லென்த் 40mm லிருந்து 70mm வரையும் பார்வையின் கோணம் 50 டிகிரி முதல் 90 டிகிரி வரை இருக்கும். இது street photography க்கு ஏற்ற லென்ஸ் ஏனெனில் இந்த வகை போட்டோக்கள் மனிதனின் பார்வை கோணத்தை ஒத்திருப்பதால் போட்டோக்ராபரின் எண்ணத்தை எளிதாக போட்டோவில் பிரதிபலிக்கிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் (Wide angle lens): மனிதனின் பார்வைக்கோணம் அல்லது 50mm ஸ்டாண்டர்ட் லென்ஸின் கோணத்தைவிட விரிந்து வைடாக இருக்கும் லென்ஸ்களை வைட் லென்ஸ் என அழைப்பார்கள். […]
லென்ஸின் பார்வையும் மனிதனின் பார்வையும்: மனிதனின் கண்கள் அற்புதமானது அல்லவா..எந்த ஒரு லென்சும் கண்களோடு போட்டி போட முடியாது. அனால் லென்ஸை இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ள நாம் நம் பார்வையை லென்ஸோடு ஒப்பிடுவோம். ஒரு மனிதனின் தலையை அங்கும் இங்கும் அசைக்காமல் நேராக பார்த்தால் அவன் பார்வையின் மொத்த கோணம் 130 டிகிரி வைட் என கணக்கிட்டுள்ளனர். ஆனால் அந்த அளவுக்கு நம் கண்களில் காட்சிகள் தெரிந்தாலும் நம்மால் வெறும் 50 டிகிரி நேரான கோணத்தில் மட்டுமே கவனம் செலுத்த அதாவது போகஸ் செய்ய முடியும்என்பது உங்களுக்கு தெரியுமா?. அது தவிர்த்த மற்ற காட்சிகள் நமக்கு மங்கலாகவே தெரியும். இதுபோன்றுதான் கேமராவில் உள்ள லென்ஸ் வழியாக பார்க்கும்போது நமக்கு காட்சி தெரிகிறது. ஒவ்வொரு […]
DSLR கேமரா லென்சின் பாகங்கள் போன பகுதியில் லென்ஸ் பற்றி சிறிது பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இன்று காணலாம். லென்ஸ் பற்றி இடைநிலை மற்றும் அட்வான்ஸ் லெவல் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். அனால் நம் தொடர் புதியவர்களுக்கு என்பதால் முதலில் லென்ஸின் பாகங்களை பற்றி சுருக்கமாக பாப்போம். 1. Front Lens Element: பிரண்ட் லென்ஸ் எலிமெண்ட் என்ற பெயரை கேட்டால் ஏதோ என்னவோ என்று நினைக்காதீர்கள். லென்ஸில் உள்ள கண்ணாடியைதான் எலிமெண்ட் என கூறிப்பிடுவார்கள். அதே போன்று லென்ஸின் வெளிப்புற கண்ணாடியை பிரண்ட் லென்ஸ் எலிமெண்ட் என அழைக்கின்றனர். லென்ஸின் அடுத்த முனையை ரியர் லென்ஸ் எலிமெண்ட் என அழைப்பர். ஒவ்வொரு லென்சும் பல்வேறு கண்ணாடிகளால் ஆனது. உதாரணத்துக்கு இங்கு 50mm […]
கேமரா லென்ஸ் வகைகள் : லென்ஸ் இல்லாமல் படம் எடுக்க முடியுமா கூறுங்கள். முடியாது இல்லையா. அந்த லென்ஸ்களில் பல வகைகள் உள்ளன அவை என்ன என்பதை பார்ப்போம். முதலில் லென்ஸை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவை ஜூம் லென்ஸ் மற்றும் Prime lens ப்ரைம் லென்ஸ் ஆகும். Zoom lens ஜூம் லென்ஸ் என்பது மாறுபடுகின்ற ஃபோக்கல் லென்த் (focal length) உடையது மற்றும் ப்ரைம் லென்ஸ் என்பது நிலையான ஃபோக்கல் லென்த் உடையது. சரி ஃபோக்கல் லென்த் என்றால் என்ன? உங்கள் லென்ஸில் ஒரு எண் 50mm, 35mm என குறிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதுதான் உங்கள் கேமரா லென்ஸின் ஃபோக்கல் லென்த். இந்த ஃபோக்கல் லென்த் அளவுகளை கொண்டு அது […]
எக்ஸ்போஷர் (Exposure) என்றால் என்ன ? நேற்று வரை நாம் கேமராவின் வகைகள் பட்டன்கள் மற்றும் செயல்படும் விதம் பற்றி பார்த்தோம். இப்பொழுது எக்ஸ்போஷர் என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு புகைப்படத்தை எடுக்க நமக்கு மூன்று முக்கியமான மூலங்கள் அவசியம்.அவை ஒளி, நேரம் மற்றும் ஒளியை உள்வாங்கும் தன்மை. இந்த மூன்றையும் இணைத்து எக்ஸ்போஷர் ட்ரையாங்கள் Exposur triangle என அழைக்கின்றனர். அதை சுருக்கமாக பார்ப்போம். 1. ஒளி (Light)ஒளி இல்லாமல் காட்சி இல்லைதானே. கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த அப்பச்சர் (Aperture) நமக்கு உதவுகிறது.Aperture உங்கள் கேமராவின் லென்ஸினுள் அமைந்துள்ளது. அதை பெரிதாக்குவதன் மூலம் ஒளியை அதிகமாகவும் சிறிதாக்குவதன் மூலம் ஒளியை குறைவாகவும் கேமராவினுல் அனுமதிக்கலாம். அப்பச்சர் […]
கேமராவின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; புகைப்பட கருவி கண்டுபிடிக்க படுவதற்கு முன்பு ஒருவர் தன் கண்களை மூடிக் கொண்டு இருக்கும் போது தான் எவ்வாறு இருப்போம் என பார்க்க முடியாதாம். அவரை யாராவது கண் மூடிய நிலையில் இருப்பது போல தத்ரூபமாக வரைந்தால் மட்டுமே அது சாத்தியம். சரி இப்பொழுது நம் விஷயத்தை கவனிப்போம். முந்தைய பதிவில் கேமராவின் பட்டன்களை பற்றி சுருக்கமாக பார்த்தோம். இந்த பதிவில் கேமரா செயல்படும் முறைப் பற்றி பார்க்கலாம். ஒரு கேமராவிற்கு உயிர் நாடி அதன் சென்சர் தான். நாம் எடுக்கும் அனைத்து படங்களையும் பதிவு செய்யும் முக்கியமான பணியை அது செய்கிறது. கேமராவில் உள்ள சென்சர் ஒளியை உள்வாங்க கூடிய பல […]
கேமரா எவ்வாறு செயல்படுகிறது ? எந்த கேமரா சிறந்தது என்ற கேள்வி நமது குழுவில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வியாக உள்ளதை அறிவீர்கள். உங்கள் கேமரா விலை குறைவாக இருந்தாலும் அதனை ஒரு அனுபவமுள்ள புகைப்பட கலைஞர் ஒருவரிடம் கொடுத்து பாருங்கள், அவர் உங்கள் கேமராவைக்கொண்டு அற்புதமான புகைப்படங்கள் எடுப்பதை காண்பீீர்கள். பொதுவாக அனைத்து கேமராக்களும் சிறந்த புகைப்படத்தை எடுக்கும் திறன் உடையதுதான். அந்த கேமராவை முழுமையாக உபயோகிக்கும் முறையை அறிந்து கொண்டாலே போதும். Tamil Photography Types of cameras ( கேமராக்களின் வகைகள் ) கேமரா பட்டன்கள் சிறு விளக்கம். நேற்று கேமராவின் வகைகளைப் பற்றி சுருக்கமாக பார்த்தோம். அதில் நாம் அதிகம் உபயோகிக்கும் DSLR பற்றி இன்று சற்று பார்ப்போம். […]