திகில் நிறைந்த MILKY WAY பயனம் தமிழில்
கடந்த மாதம் milky way எடுக்க புதியதாக ஒரு இடத்துக்குV போனேன் … அந்த அனுபவம் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இருந்தது .. ..
அந்த இடத்தை பற்றி என் போட்டோகிராபி நண்பர்ட்ட சொன்னேன் .. ஆனால் அவரோ அந்த இடத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக அதிகமான நபர்கள் சொன்னதாக் என்னை எச்சரித்தார்..எனினும் இதுவரை பேயை மட்டும் போட்டோ எடுத்த அனுபவம் இல்லை, அப்படி எதாச்சும் சிக்குனா பேயை மாடலா வைத்து போட்டோ எடுத்த பெருமை கிடைக்கும்ங்குற நப்பாஸைல அந்த இடத்துக்கு கிளம்புனேன் ..
பாலைவனத்துல இரவு நேரம் தனியா போக கூடாதுங்குறதுனால காரணம் பேய் இல்லை , நாங்க milky way போட்டோ எடுக்க போகும் இடம் சிட்டிய விட்டு கிட்ட தட்ட 150கி.மீ தொலைவில் இருக்கும் , எதாச்சும் பாம்பு ,தேள் கடிச்சுட்டா ஆம்புளன்ஸ் கூப்ட ஒரு ஆளு கூட இருக்குறது நல்லதுங்குற காரணத்திற்காக என் குடும்ப உறவினர் இரண்டு பேரையும் ,ரூம் மெட் ஒருத்தரையும் milky way காட்டுறேன்னு சொல்லி கூப்ட்டு போனேன்..
அந்த இடம் ஒரு அமானுஸ்யம் நிறைந்த இடமா இருந்தது காரணம் அந்த இடத்தை சுற்றி 200கி.மீ பாலைவன மணல் தான் இருக்கு ஆனால் , இதற்கு மத்தியில் 100 டிகிரிக்கு மேல் அடிக்கும் வெயில் அடிக்கும் கோடை காலத்தில் நீர் நிறைந்த ஒரு குட்டை ,
அதை சுற்றியும் கிட்ட தட்ட 5 யிற்கும் மேற்பட்ட ஓட்டகங்கள் செத்து கருவாடாக மாறி கொண்டிருந்தது.. …
இருந்தாலும் ஆந்திரா வரைக்கும் வந்தாச்சி சிரஞ்சீவியா பாக்கம போன எப்படி? அதனால போட்டோ எடுக்கலாம்னு கேமிரா ட்ரைபோட் எடுத்து வெளில வச்சா நிக்க மாட்டேங்குது காரணம் வெளில பயங்கற மணல் காற்று வீசி கொண்டுருந்தது,
போட்டோ எடுகும் ட்ரைபேட் கிட்ட தட்ட 8கிலோ வரை எடை தாங்க கூடிய அது காற்றில் வேகத்தில் கீழே விழுந்து கொண்டே இருந்தது .அதானால் கிட்ட தட்ட ஒரு மணி நேரம் காருக்குள்ளே உட்கார வேண்டிய நிலை , எனக்கு மட்டும் மனதில் ஒரு மகிழ்ச்சி எப்படியும் இன்ன்னிக்கு ஒரு புது மாடல போட்டோ எடுத்துடுவோம்னு ஆனால் ஒரு 6 மணி நேரம் அங்க இருந்தோம் கடைசி வரை ஒன்னும் கண்ணுக்ல சிக்கல , நான் கூட வந்தவங்கள மட்டும் வச்சி சில போட்டோ எடுத்துட்டு ஒரு 6 மணி நேரத்துல அந்த இடத்த விட்டு கிளம்பியாச்சு