Sony 16-35mm 2.8 lens Unboxing Tamil Review
Sony 16-35mm 2.8 lens unboxing பன்றதுக்கு முன்னாடி இதை நான் வாங்குன அனுபவததை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் .
இறைவன் உதவியால் நீண்ட நாள் ஆசையான SONY 16-35 MM 2.8 GM லென்ஸ் வாங்கிட்டேன் .. இதுல ஏன் இறைவன் உதவியால்ன்னு சொல்றதுக்கு பின்னாடி ஒரு சின்ன அனுபவம் இருக்கு ..
sony 16-35mm f2.8
முதலில் இருக்குற காசுக்கு ( i mean credit card limit 6000 தான் ) sony body மட்டும் தான் வாங்க முடிந்தது ,
கொஞ்சம் பொறுத்து நல்ல லென்ஸா sony la GMaster வாங்கலாம்னு காத்துட்டு இருந்தேன் .. என்னுடைய முதல் target 16-35mm 2.8 GM .ஆன அதோட விலை body விட அதிகம் , கிட்டதட்ட 1.80 laksh .
என் நண்பர்கள் சிலர் கேமிராவா சும்மா வச்சிக்காத 50000 விலையில் tamron 28-75mm 2.8 லென்ஸ் நல்லா இருக்கு அதை வாங்குன்னு சொன்னாங்க.சரி நானும் இருக்குற எல்லா காசையும் போட்டு online la tamron lens வாங்குனேன் ..பாக்ஸ் தொறந்ததும் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.ஏன்னா அந்த லென்ஸ்ல அவளோ தூசி மற்றும் கீரல்கள் இருந்துச்சு ,எவனோ ஏற்கனவே பயனபடுத்தியதை என் தலையில கட்டிட்டாங்கன்னு நினைச்சுட்டு உடனே return எடுத்துட்டு போக சொல்லிட்டேன்.
மறு நாள் milkyway shot எடுக்க நண்பர்கள் ஒரு plan போட்டுருந்தாங்க , சரி லென்ஸ் நல்லா இருந்தா நாமே வச்சிகலாம்னு எடுத்துட்டு போயிட்டேன்போட்டோவும் எடுத்தேன் படம் எல்லாம் ரொம்ப சூப்பரா வந்துருச்சு .,

ஆனால் எவனோ use பன்னிட்டு கொடுத்த பயன்படுத்த மனம் இல்லாமல் திருப்பி கொடுத்துட்டு , sony lens வாங்கனும்னு கைல இருக்குற nikon d7200 body , and 18-140 mm lens , and tokina 11-16mm lens and 50mm prime lens , nikon flash ன்னு ஒரு சாம்ராஜ்யத்தையே விற்று கூட 75000 தான் தேறுனுச்சு .மீதம் 1 laks தேவைப்பட்டது , tamron lens திரும்ப கொடுத்த அதுல ஒரு 50000 வரும் , இன்னும் 50000 க்கு 6 மாதம் வெறும் body யோட காத்திருக்கனும்னு இருந்தேன் .
.இதில் ஈது பெருநாள் க்கு வேற பல நாள் விடுமுறை வருது ,கைல லென்ஸ் இல்லாம என்ன பன்றதுன்னு சோகத்துல இருந்தேன் ..
நான் வழக்கம் போல ஈதுக்கு முதல் நாள் mall kku போனப்ப லென்ஸ் விலை விசாரிச்சேன் .. GRAND STORE manager என்ன பார்த்த உடனே கண்டு பிடிச்சிட்டார் இவன் போன வாரமும் விலைகேட்டுட்டு போனவன்னு .. அதனால என்னவோ என்னை பார்த்து அவனுக்கு ஒரு சந்தோசம் , ஏன்னா போன வாரம் 1.75 laks விற்ற sony 16-35mm 2.8lens இன்னைக்கு 1.50 laks nnu சொன்னான் ..
எனக்கு என்ன பன்றதுன்னு தெரில இறைவனுக்கு நன்றி சொல்லிட்டு 6 மாதம் கழித்து வாங்க வேண்டிய லென்ஸ இப்போவே வாங்கிட்டேன் …அடுத்த 6 மாதம் கழித்து target sony 85mm 1.8 ..
sony 16-35mm f2.8 யில் முதல் முறையாக எடுத்த சில படங்கள் sample photos sony 16-35mm f2.8 lens
sony 16-35 mm 2.8 lens
sony 16-35 mm 2.8 lens
dubai creek harbour
sharjah mosque
dubai frame
dubai creek
dubai creek
dubai creek
dubai creek
dubai creek